அன்னையின் மறைவு
அன்புத் தேவதையே !
நீ மறைந்துவிட் டாயென நினைக்கையிலே
என்னுள் இரத்தஅலைகள் கொந் தளிக்கின்றது -
மனக் கப்பல்நடுவே தத் தளிக்கின்றது,
பாசம் - வற்றாத ஜீவ நதியே !
வாழ்க்கை பருவத்தே பெய்திட்ட மா மழையே !
குணக் குன்றாக வாழ்ந்திட்ட அன்னையே !
மன நினைவெல்லாம் என்நலனை எண்ணியே, - உயிரே !
நீ மறைந்துவிட்டாயென நினைக்கையிலே
என்னுள் இரத்தஅலைகள் கொந் தளிக்கின்றது -
மனக் கப்பல்நடுவே தத் தளிக்கின்றது,
ஓர்பத்து மாதங்கள் வைத்திருந்தாய் - மனதில்
எத்தனை ஆண்டுகள் சுமந்திருந்தாய் - இனி
அன்புச் சிம் மாசனத்தில் அமர்த்திவைத்து
அருகிருந்து அகமகிழ பார்க்க நினைத்தால் - இன்றோ
நீ மறைந்துவிட்டாயென நினைக்கையிலே
என்னுள் இரத்தஅலைகள் கொந் தளிக்கின்றது -
மனக் கப்பல்நடுவே தத் தளிக்கின்றது,
தோல்வியிலே துவண்டிடாமல் தோள் கொடுத்தாய் !
வேதனையில் வீழ்ந்திடாமல் விவேகம் அளித்தாய் !
மடிமீது தலைவைத்து ஆறுதல் பெற்றேன்!
தலைமீது இடியிறங்கினும் தாங்கிக் கொண்டேன், இன்றோ, --
நீ மறைந்து விட்டாயென நினைக்கையிலே
என்னுள் இரத்தஅலைகள் கொந் தளிக்கின்றது -
மனக் கப்பல்நடுவே தத் தளிக்கின்றது.
- - - - --- - --- --- - - - - -- - - - - - - - - - -- -- -- -- - - - - -- - - - - - - -- -- - -- - -- - - - - - -- --- - --- -- - -
அன்னையின் மறைவெனும் ஆற்றொணா இழப்பினால்
அன்றாடம் மனதினிலே ஆயிரம் சவுக்கடிகள்
ஆனாலும் உனதினிய ஆறுதல் சொல்மலர்கள்
அடிபட்ட இடத்திலிடும் மென்மையான ஒத்தடங்கள்
திருவிழா மகிழ்ச்சியிலே திரளான கூட்டத்திலே
தாயினைப் பிரிந்துவிட்டு தனக்கும்வழி தெரியாமல்
தத்தளிக்கும் சிறுவனைப்போல் தவிக்கின்றேன் புலம்புகின்றேன் !
ஏன் வந்தோம் இங்கு ? எதற்கினியும் வாழ ?
எண்றெண்ணி நானும் ஏங்குகின்றேன் நிதமும் !
கண்ணீரில் புள்ளி வைத்து வாழ்வதென்ன கோலமிங்கு !