தப்பாமல் தாளமிடும் தட்டச்சு இயந்திரமே!
தவறாமல் மாற்றிடுஎன் தலையெழுத்தை சீக்கிரமே!
காலை வேளையிலே காதலுடன் நான்வருவேன்
கனத்த கவருக்குள் கண்மூடி நாணிநிற்பாய்
முக்காட்டை நீக்கியுந்தன் முகநிலவை தரிசிப்பேன்
பூக்காட்டு மல்லியன்ன வெண்தாளை சூட்டிடுவேன்
கைவிரல்கள் பட்டதுமே சிரித்தோடி ஒதுங்குகிறாய்
கைப்பிடியை இழுத்தாலும் கணநேரந்தான் நிற்கின்றாய்
தவறான வார்த்தைகளை செயல்களை தவிர்ததுநானும்
பாங்காகப் பயின்றிடவே பதமுடனே உதவுகின்றாய்
சீக்கிரமாய் வருமுந்தன் சிங்கார சுயம்வரத்தில்
சாத்திரங்கள் பலவறிந்த சாணக்கியர் வந்தாலும்
மணந்தால்இந் நாயகைனைத் தான்மணப்பேன் எனநீயும்
தேர்வாளர்உன் தந்தையிடம் தூதுசென்று உரைத்திடுவாய்!
தட்டெழுத்து மங்கைநீ தட்டாமல் மாலையிட்டால்
தட்டெழுத்தர் எனநானும் உரிமையுடன் உனைச்சேர்ந்திடுவேன்
தெவிட்டாத இசையளிக்கும் வீணையாவாய் என்கரத்தில்
கணமேனும் பிரிந்தாலும் யுகமாகும் எனக்கு!

Excellent..! The way you have expressed about Typewriter is really good..:)
ReplyDeleteNice one.. :)
ReplyDelete