எதிர்காலம் நமக்கது புதிர்காலம்
கதிர்வந்தால் மறைந்திடும் வெண்பனியாகும்
துன்பமெல்லாம் - எதிர்காலம்
இனி இளவேனிற் காலம்
எதிர்காலம் நமக்கது ஜெயக்காலம்
பகைவரெல்லாம் பரிதவித்து பறந்தோடும்
வெற்றிவரும் - எதிர்காலம்
இனி விழாக் கோலம்
எதிர்காலம் நமக்கது நிலவாகும்
நிகழ்கால வெம்மைகளை குளிர்விக்கும்
மணற் பாலையிலும் எதிர்காலம்
எதிர்வரும் சோலையாகும்
எதிர்காலம் சுவைமிகு கனியாகும்
தோல்விக் கசப்புகள் கரைந்தோடும்
காதினிக்க - எதிர்காலம்
புதுப் பாடலாகும்
கதிர்வந்தால் மறைந்திடும் வெண்பனியாகும்
துன்பமெல்லாம் - எதிர்காலம்
இனி இளவேனிற் காலம்
எதிர்காலம் நமக்கது ஜெயக்காலம்
பகைவரெல்லாம் பரிதவித்து பறந்தோடும்
வெற்றிவரும் - எதிர்காலம்
இனி விழாக் கோலம்
எதிர்காலம் நமக்கது நிலவாகும்
நிகழ்கால வெம்மைகளை குளிர்விக்கும்
மணற் பாலையிலும் எதிர்காலம்
எதிர்வரும் சோலையாகும்
எதிர்காலம் சுவைமிகு கனியாகும்
தோல்விக் கசப்புகள் கரைந்தோடும்
காதினிக்க - எதிர்காலம்
புதுப் பாடலாகும்
Good one..very nice
ReplyDeleteEnergetic thoughts which makes me trust on future uncle!!!!!!!!! really superbbbbbb........
ReplyDeleteits very nice to hear from you manju! thanks very much for entering the blog and
Deleteregistered your encouraging words.