பாசப் பறவைகள் !
அப்பா அம்மா என்றழைத்து
அன்பைப் பொழிந்த செல்வங்களின்
பாச வெள்ளத்தில் தத்தளித்தோம்
பாரில் உள்ளவரை என்றும் நினைத்திருப்போம் !
பளிச்செனப் பாத்திரம் துலக்கிய தென்ன !
பாங்குற வீட்டைப் பெருக்கிய தென்ன !
பணிவுடன் பேசிஎமை பரவசப் படுத்திய
தென்ன ! என்ன ! என்ன !
ஆட்டத்தில் வீட்டை அதிரவைத்த தென்ன !
பாட்டுக்கு பாட்டால் பதிலளித்த தென்ன !
உரிமையாய் வீட்டிலெங்கும் உலாவித் திரிந்த
தென்ன ! என்ன ! என்ன !
பெற்றுவிட்டோம் பிள்ளைகள் இரண்டையுமே
பெண்ணாக எனநினைத்து ஓர்நாளும்
கண்கலங்கி நின்றதில்லை இன்றுவரை !
கணநேரமும் தவித்ததில்லை இதுவரையில் !
ஆனால்?
ஐயிரண்டு பெண்களைத்தான் அருகருகில் பார்த்தவுடன்
ஆசையின்று பிறக்குதம்மா ஆழ்மனதின் அடியினிலே !
மூத்தமகன் ஒருவனன்று முன்தோன்றி இருந்திருந்தால்
மருமகளாய் மற்றொருமகள்தான் வந்துவாய்த் திருப்பாளே !
உங்களைப்போல் பத்துப்பெண்கள் பெற்றிருந்தாலும்
கவலைப்பட ஏதுமில்லை சத்தியமாக! - உலகில்
களிப்புமட்டுந் தானென்று கண்டுகொண்டேன் !
செழிப்புடன் என்றும்வாழ்கவென்று வாழ்த்துகிறோமே !