Wednesday, 2 May 2012

தட்டச்சு அனுபவங்கள்

தட்டச்சுப் பயிற்சித்தேர்வு - தளர்ந்துபோன மனதின் நோவு

போனால் போகட்டும் போடா! - இந்த
NEW-TESTஇல் NIL-MISTAKEஅடித்தவர் யாரடா? 
போனால் போகட்டும் போடா! 

வந்தது TESTடு போனது MARKகு
திருத்தியவர் யாரோ தெரியாது
TYPEஅடித்தவர் எல்லாம் PASSஆனால்
FINEகட்ட ஆளே இங்கேது?
RE-TEST என்பது சோதனையடா - அதை
RE-TYPEபண்ணுவது வேதனையடா! 
போனால் போகட்டும் போடா! 

வந்தது TESTடு அடித்தேன் CUTடு
ABSENT போடாமல் விடுவாரா?
அடுத்தநாள் வந்தால் அபராதம் போட்டுவசூல்
பண்ணாமல் TYPEஅடிக்க விடுவாரா?
நமக்கும் மேலே ஒருவரடா! - அவர்
PRINCIPALநியமித்த வசூல் திலகமடா!
போனால் போகட்டும் போடா! 

தமிழிலும் சேர்ந்தேன் தட்டச்சு பயின்றேன்
TESTஇல் வரலாறு காணாத தப்புகளடா!
தமிழ் வாழ்கவெனக் கூறிவிட்டால் மட்டும்
வேகம் தட்டச்சில் வந்திடுமோ சொல்லிவிடடா?
தமிழில் தட்டச்சு சிரமமடா - தொடர்ந்து
SHIFT-KEYபோடுவது தொல்லையடா!
போனால் போகட்டும் போடா!