கனவு தேசம்
கண்ணீரின் பாதையிலே பயணம் செய்தேன்
கடவுளை மட்டுமிங்கு நம்பி நடந்தேன்.
உறவினர்கள் எல்லோரும் ஓடி விட்டார்கள்
நண்பர்கள் அனைவருமே நழுவி விட்டார்கள்
தன்னந் தனியனாய்க் காத் திருந்தேன்
தத்தளிக்கும் மனதுடனே கலங்கி நின்றேன்.
இருளினிலே உட் கார்ந்தேன் வெளிச்சமாக
இயேசு என்னைத் தேடிவந்தீர் உருக்கமாக
இன்று கானான் தேசமதை கண்டுகொண்டேன்
களிப்புடனே கனவுதேசத்தில் வாழப்போகிறேன்!