Tuesday, 15 May 2012

பேச்சுவார்த்தை


காலைவேளையிலே காப்பியை அருந்திக் கொண்டு
கண்களை மேயவிட்டேன் தினசரி செய்திகளில்
தாளை முழுதும் நிரப்பிய பேச்சுவார்த்தை எனும்தலைப்பில்
காலைவிட்டு பார்க்காமல் தலைகுப்புற விழுந்துவிட்டேன்!

ஆலைத் தகராறென்பார் அகவிலைப்படி உயர்த்த வென்பார்
ஊதிய உயர்வென்பார் ஊக்கபோனஸ் வேண்டுமென்பார்
பேசித் தீர்த்திடலாம் பிரச்சினைகளை என்றுரைப்பார்
நாலு தலைமுறைக்குள் முடிந்தால் நாட்டிலது அதிசயமே!

அஸ்ஸாமியர் போராட்டம் அகாலிகளின் ஆர்ப்பாட்டம்
அவதிப்படுபவர்கள் அன்றாடம் பொதுமக்கள்
ஆண்டாண்டு காலம் அரசுடன் பேச்சுவார்த்தையென்று
அரைத்தமாவை அரைக்கின்ற விளக்கெண்ணை தலைவர்கள்!

அண்டை நாடென்பார் அயல்விவகார அமைச்சரென்பார்
பண்டைய விவ காரமெல்லாம் பேசித்தீர்த் திடவென்பார்
இன்றையநிலை சூமுகமென்று கட்டித்தழுவிக் கொள்வார்
நாடு திரும்பியதும் போர்தொடுக்க 
யோசிப்பார் !