Wednesday, 25 April 2012

பிரிவு

கண்ணில் நீர் வடிய பெண்ணே உனை பிரிந்தேன்
மண்ணில் வாழுமட்டும்மனமே மறவாதடி.


பொன்னில் செதுக்கிவைத்து பூவாய் வடிவுதந்து
முகத்தில் நிலவுவைத்து முகிலாய் கூந்தல்தந்து
புருவத்தில் வில்லும்வைத்து கயலாய் கண்ணும்தந்து
ஒயிலாய் நடக்கவைத்து மயிலாய் ஆடவிட்டான்

கனவாய் கடந்துவந்து நினைவாய் நெஞ்சினிலே
இதமாய் இருப்பவளே இனிமை தருபவளே
பிணமாய் உருண்டாலும் பெட்டியிலே வைத்தாலும்
நிஜமாய் நினைத்திருப்பேன்  
நித்திய நித்தியமே!




1 comment:

  1. Really good..! You have gifted way with words.. Keep Writing.. I ll be keep reading..:)

    ReplyDelete