அன்பு தேவதை !
எங்கிருந்தோ வந்தாள்
அங்கிள் என்று எனை அழைத்தாள்
இங்கிவளை நான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன் - ஸ்ரீநிவி
எங்கிருந்தோ வந்தாள்!
சைக்கிளில் சென்றால்தான் - வகையாய்
சாப்பிடவே முடியும் - தினமும்
வாக்கிங் சென்றால்தான் - நலமுடன்
வாழவே முடியும் என்று
கடவுள் தந்த வாழ்க்கையிது
கண்ணிரின் பாதை யது
ஆயிரம் கவலைகள்
அடிமனதை அரித்தாலும்
அங்கிள் என நீ அழைத்து
அருகினில் வரும்போது
ஆதவனைக் கண்ட வெண்பனிபோல்
அனைத்துமே மறையுதம்மா!
விதவிதமாய் உடையணிவாய் - அதை
வீட்டில் வந்து காட்டிடுவாய்!
அழகு நீ என்றதுமே
ஆனந்தப் புன்னகையால் எமை
அடிமையாக்கி அகம் மகிழும்
அன்புத் தேவதை நீ!!
உனக்கென்ன ஸ்ரீநிவி !
பாசத்தை மட்டுமே பொழியும் அப்பா !
கனிவுடன் கண்டிப்பு காட்டும் அம்மா !
சில்மிசங்கள் செய்தாலும்
சிரிக்க வைக்கும் அக்கா
பற்றாக்குறைக்கு பாட்டிமார்கள் வேறு
தம்பி தங்கைகள் என
ஆயிரம்பேர் அருகினில் இருந்தாலும்
அங்கிள் என நீ அழைத்து
அருகினில் வருவதெல்லாம்
ஆண்டவனின் அருளென்று
அனுதினமும் மகிழ்கின்றேன்
No comments:
Post a Comment