Saturday, 16 February 2013

அன்பின் விசுவரூபம்

எனதினிய   மனைவியே
   மனதினிய தோழியே
என்றுமே இனிநீதானே
   எனதுயிரில்சரி பாதியே !

அடுப்பெரிக்கத் தெரியாமல்
   அன்றுவந்தாய் - இன்று
அறுசுவை யோடு உண்டி
   அளித்து மகிழ் கின்றாய் !

என்வீடு ஈதில்லை
   என்றுரைத்தாய் - இன்று
எனைவிட்டு ஓர்கணமும்
   பிரிய மறுக்கின்றாய் !

நகைச்சுவையாய் சொன்னாலும்
   பகைக்கவே செய்தாய் - இன்று
ன் 
ஆனந்தச் சிரிப்பாலே வீட்டை
   அதிர வைக்கின்றாய் !

இயேசுதான் சொன்னாரென்று
   ஏந்திழைநீ உறுதியுடன்
ஏழையென்னை மணமுடித்தாய்
   இன்பக்கனவொன்றை பரிசளித்தாய் !

ஆசிரியப் பணிமுடித்து
   அவசரமாய் உடன்வந்து
ஆவிபறக்கத் தேநீர்
   ஆற்றித்தருவாய் அதுஅமுதம் !

உருவத்தில் சிறிதானாலும் உள்ள
   உயரத்தில் இமயம்நீ
அன்பில்விசுவ ரூபம்நீ உனை
   அண்ணாந்து பார்க்கின்றேன் !

காதலர் தினத்தினிலே ஒரு
   காலைமுடக்கி உன்முன்
கையில் கவிமலருடனே
   காத்திருப்பேன் கனிவுடனே !

கடைக்கண் சிரிப்பாலே
   கனிவாய் மொழியாளே
ஆதரிப்பாய் பெண்ணே உன்
   ஆயுள் முழுவதுமே !!

9 comments:

  1. Wow..!!! Superb..Excellent :) :) :)

    ReplyDelete
  2. Very nice:):)
    Wish ur love grow beyond the sky:)
    Keep writing:)

    ReplyDelete
  3. Vaazhga nim anbu... Valarga nim kadhal!! Valarpirai pol ungal anbu melum melum valara vaazhthukal!!

    ReplyDelete
    Replies
    1. oh! what a poetic comment!! thanks for your wishes getc.

      Delete
  4. Anru Bannerghatta pogum vazhiyil, Aunty vegu dhooram nadandha bozhdhu, meengal chellamaaga doravai kadindhu kondeergal!!

    "Romba dhooram nadandhaal, avalukku kaal valikkum, appuram kalaithu poi viduvaal... angu ponavudan utkarndhu viduvaal... paar" enru..

    Viyandhen!!! Ennae oru anbu!! Akkarai!! Parivu!! Adadadadadadaaaa...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கெத்சி, ஆனால் இந்த அடடடா மட்டும் எங்கேயோ கேட்டதுபோல் இருக்கின்றதே!
      சரி, எதற்கும் ஒரு ஓரத்தில் வைத்துக் கொள்கிறேன்,என் மனைவி காலையில் எழுந்து, 2 அல்லது 3 கூட்டுப் பொறியலுடன் உணவு தயாரித்து எட்டரை மணிக்குள் பள்ளிக்குச் சென்று, மாலை வந்தவுடன் எனக்கு டிபன் ஏதாவது செய்து, டீ கொடுத்து அனுப்புவாள். இரவு சப்பாத்தி, உண்மையில் இதையெல்லாம் தினமும் என்னைச் செய்யச் சொன்னால் நான் ஊரைவிட்டே
      ஓடிவிடுவேன். உண்மையில் அவளுடைய அன்பையும், அக்கறையையும் என்னுடன் ஒப்பிடவே முடியாது என்றே எண்ணுகிறேன், இப்போதுதான் புரிகிறது, ஆண்கள் அன்பான வார்த்தைகள், கவிதைகள், அவ்வளவுதான். முடிந்தால் அதிகபட்சமாக அடுத்தவர்களின் உழைப்பில் தாஜ்மஹால்
      கட்டலாம் அவ்வளவுதான், ஆனால் பெண்கள் கடினமான வேலைகள் மூலம் தங்களுடைய அன்பை
      வெளிப்படுத்துகிறார்கள். இதனால்தான் நான் அன்பின் விசுவரூபம் என்று எழுதியது வெறும் கவிதைக்காக அல்ல, அவளுடைய உண்மையான வளர்ச்சியை வாழ்க்கையில் நான்
      பார்த்ததினால்தான், உன்னுடைய அன்பான பதிவுக்காக நன்றி, என்றென்றும் அன்புடன்,

      Delete
    2. ethutha LOVE aa uncle :-) superb!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete