Monday, 3 March 2014

பாசப்  பறவைகள்  !


அப்பா   அம்மா    என்றழைத்து

அன்பைப்   பொழிந்த   செல்வங்களின்

பாச   வெள்ளத்தில்   தத்தளித்தோம்

பாரில்    உள்ளவரை     என்றும் நினைத்திருப்போம் !



பளிச்செனப்   பாத்திரம்   துலக்கிய   தென்ன !

பாங்குற   வீட்டைப்   பெருக்கிய   தென்ன !

பணிவுடன் பேசிஎமை   பரவசப்   படுத்திய 

தென்ன !     என்ன !      என்ன !



ஆட்டத்தில் வீட்டை அதிரவைத்த  தென்ன !

பாட்டுக்கு பாட்டால்  பதிலளித்த   தென்ன !

உரிமையாய்  வீட்டிலெங்கும்   உலாவித்  திரிந்த

தென்ன !   என்ன !   என்ன !



பெற்றுவிட்டோம்   பிள்ளைகள்   இரண்டையுமே

பெண்ணாக   எனநினைத்து    ஓர்நாளும் 

கண்கலங்கி   நின்றதில்லை   இன்றுவரை !

கணநேரமும்   தவித்ததில்லை   இதுவரையில் !


ஆனால்?


ஐயிரண்டு  பெண்களைத்தான்  அருகருகில்  பார்த்தவுடன்

ஆசையின்று  பிறக்குதம்மா   ஆழ்மனதின்   அடியினிலே !

மூத்தமகன்   ஒருவனன்று   முன்தோன்றி    இருந்திருந்தால்

மருமகளாய்  மற்றொருமகள்தான்  வந்துவாய்த்  திருப்பாளே !



உங்களைப்போல் பத்துப்பெண்கள் பெற்றிருந்தாலும்

கவலைப்பட ஏதுமில்லை  சத்தியமாக!   -   உலகில்

களிப்புமட்டுந்    தானென்று    கண்டுகொண்டேன் !

செழிப்புடன்   என்றும்வாழ்கவென்று   வாழ்த்துகிறோமே !

Monday, 20 January 2014


                                                               கனவு  தேசம்

கண்ணீரின் பாதையிலே பயணம் செய்தேன்
     கடவுளை மட்டுமிங்கு நம்பி நடந்தேன்.


உறவினர்கள்  எல்லோரும்  ஓடி  விட்டார்கள்
     நண்பர்கள் அனைவருமே நழுவி விட்டார்கள்
தன்னந்  தனியனாய்க்  காத் திருந்தேன்
    தத்தளிக்கும் மனதுடனே கலங்கி நின்றேன்.


இருளினிலே உட்  கார்ந்தேன் வெளிச்சமாக
    இயேசு என்னைத் தேடிவந்தீர்  உருக்கமாக
இன்று கானான் தேசமதை  கண்டுகொண்டேன்
    களிப்புடனே கனவுதேசத்தில் வாழப்போகிறேன்!